முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 4 ஆண்டுகளில் மோடி அரசின் விளம்பர செலவு ரூ. 4 ஆயிரம் கோடி

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

 புது டெல்லி: மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக மட்டும் ரூ.4 ஆயிரத்து 880 கோடி செலவு செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் மாநிலங்கள் அவையில் அளித்த தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசு தனது திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரத்து 880 கோடி செலவு செய்துள்ளது. கடந்த 2014-15-ம் ஆண்டில் ரூ.979.78 கோடியும், 2015-16-ம் ஆண்டில் ஆயிரத்து 160.16 கோடியும், 2016-17-ம் ஆண்டில் ஆயிரத்து 264.26 கோடியும், 2017-18-ம் ஆண்டில் ஆயிரத்து 313.57 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. 2018-19-மம் ஆண்டில் இதுவரை ரூ.162.83 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.2,128.33 கோடி அச்சு விளம்பரத்துக்கும், வீடியோ மற்றும் ஆடியோ விளம்பரங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 131.57 கோடியும், சுவரொட்டிகள், விளம்பரப்பலகைகள், பதாகைகள் உள்ளிட்ட வகைகளில் விளம்பரம் செய்ததற்காக ரூ.620.70 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 52 விளம்பரங்கள் செய்த வகையில் ரூ. 61 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ரத்தோர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து