முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈழ படுகொலையில் தி.மு.க.தான் குற்றவாளி அ.தி.மு.க.வின் தீர்மானத்திற்கு உலக தமிழர் பேரவை வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,திமுக மற்றும் காங்கிரசை போர்க் குற்றவாளியாக அறிவித்து, தி.மு.க.வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதை உலகத் தமிழர் பேரவை வரவேற்று முழு ஆதரவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைமை பொறுப்பாளர் வாசுகி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-. மனிதன் உயிர்தான் அனைத்திற்கும் மேம்பட்டது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட மனித, அதுவும் நமது தமிழினம் ஒட்டு மொத்தமாக 2009 ஈழ இறுதிப் போரில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படும் போது அதை வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது போல நாடகம் நடத்தியது அன்றைய தமிழகத்தை காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி செய்த தி.மு.க.வின் கருணாநிதி ஆட்சி. ஈழப்போரை மறைமுகமாக முன்நின்று நடத்திய அன்றைய மத்தியில் ஆட்சியாளர்களான காங்கிரஸ் கட்சி, இனப்படுகொலைக்கு துணைபோனதை பல்வேறு சான்றுகள் மூலம் நிருபிக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சில பல வேளைகளில் ஈழ போராட்டத்திற்கு ஆதரவளிப்பது போல நாடகம் நடத்தி தமிழகத்தில் போராட்டங்கள் சிலவற்றை கையிலெடுத்திருந்தாலும், 2009 இறுதிப் போரின் போது 1.5 லட்சம் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுக்காமல், வேடிக்கைப் பார்த்ததோடு அந்த படுகொலைக்கு துணையாக இருந்து வந்ததால், இவ்விரு கட்சிகளையும் இனப்படு கொலையாளர்காளாகவே உலகத் தமிழர்களின் எண்ணமாக மனதில் புகைந்து வந்திருக்கிறது.
தமிழகத்து ஆட்சியாளர்களான இன்றைய அ.தி.மு.க.வின் தீர்மானம், ஈழத் தமிழர் இனப்படுகொலையை அரசியல் செய்வதாக எடுத்துக் கொண்டாலும், உலகம் அறிந்த உண்மை நிலையான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை போர்குற்றவாளியாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பது என்பது உலகத் தமிழர்களின் மன நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.

இதையொட்டி அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து உலக மனித நேயர்களுக்கு ஈழத் தமிழர்களுக்கு எதிரான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் துரோக செயல்பாட்டை வெளிச்சம் போட்டு காட்ட இப்போராட்டத்திற்கு பேரதரவு நல்க வேண்டுமாய் உலகத் தமிழர் பேரவை கேட்டு கொள்வதோடு, முழு ஆதரவையயும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து