புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருந்தால், பித்தப்பை மற்றும் கல்லீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம். இறைச்சிகளின் மீது நாட்டம் இருந்தால், உடலுக்கு புரோட்டீனை தேவை என்று அர்த்தம். சர்க்கரை மீது ஆவல் அளவுக்கு அதிகமாக நாம் சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்று அர்த்தம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நெதர்லாந்தில் குளிர்சாதனத்துக்கு மாற்று வழியாக பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப் பெட்டி அமைத்து உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த குளிர்சாதனப் பெட்டிக்கு மின்சாரம் தேவையில்லை. இதில் சேமிக்கப்படும் உணவை உண்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம .
இன்றைய நவீன யுகத்தில் மன அழுத்தம் குறைய சுவாச பயிற்சி, பிராணயாமம் என பல்வேறு மூச்சு பயிற்சிகளும், யோக பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நாம் நாசித் துவாரத்தின் வாயிலாக மூச்சை இழுத்து அதை நுரையீரலுக்கு அளிப்பதன் மூலம் பிராண வாயு உடலுக்கு சென்று தேவையான ஆற்றலை அளிக்கிறது. ஆனால் நாம் சுவாசிக்கும் போது ஒரு நேரத்தில் ஒரு நாசித் துவாரத்தின் வாயிலாக மட்டும்தான் சுவாசிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா... ஒரே நேரத்தில் இரு நாசித் துவாரங்கள் வாயிலாகவும் மனிதன் சுவாசிப்பது கிடையாது. கேட்பதற்கு மிகவும் இது சிக்கலானது. ஒரு துவாரத்தின் வழியாக சுவாசித்தாலும் இரு நாசிகளும் சம அளவில் பிராண வாயுவை பகிர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாசித் துவாரத்தின் வாயிலாகவும் சுவாசிப்பது சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மாறி மாறி நடக்கும் என்பதும் ஆச்சரியமான ஒன்று தானே.
கோபம், வெறுப்பு உணர்ச்சியும்கூட மகிழ்ச்சி தரும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, சீனா, இஸ்ரேல், கானா, போலந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2, 300 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தாங்கள் விரும்பியதற்கு நிகராக அனுபவிக்கும் உணர்ச்சிகள் இருந்தால் மக்களின் வாழ்க்கை திருப்தியுடன் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
செவ்வாயில் முதன்முறையாக நாசா தனது பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் மூலம் ஆக்சிஸனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள மோக்ஸி என்ற இயந்திரம் மூலம் இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் செவ்வாயில் உள்ள சூழலை பயன்படுத்தி, அதில் உள்ள பெரும்பான்மையான கார்பன் டை ஆக்ஸைடை ஆக்ஸிசனாக மாற்றியுள்ளது. இந்த முயற்சியானது மனிதர்கள் எதிர்காலத்தில் செவ்வாயில் குடியேறுவதற்கான ஒரு அச்சாரமாக எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது. இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 13 hours ago |
-
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.