கிரீஸ் நாட்டில் உள்ள லெஸ்போஸ் தீவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிசய மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட மரம் ஒன்று மட்கி போகாத நிலையில் அப்படியே அதன் ஈரத்தன்மையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான மரம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மரத்தின் கிளைகளும் வேர்களும் அப்படியே இருந்ததாக அறிஞர்கள் வியப்படைந்துள்ளனர். மேலும், இந்த மரத்தை ஆராய்ச்சி செய்ததில் கிளைகளும் வேர்களும் நல்ல நிலையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.மேலும் ஆய்வில் 20 மில்லியன் ஆண்டுக்கு முன்பு நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மரம் நிலத்தடியில் புதைந்திருக்கலாம் என்றும், அப்போது எரிமலை சாம்பல் அந்த மரத்தின் மேல் பரவி இருக்கலாம், அதனால் இந்த மரம் நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட அந்த மரத்தின் வயதை ஆய்வு மூலம் கண்டறியலாம் இது மிகுந்த ஆச்சரியம் தானே..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
1890ம் ஆண்டில் பிரிட்டிஷ் காரர்களால் ஏற்படுத்தப்பட்ட, மஹாலக்ஷ்மி டோபிகாட் மும்பையில் மஹாலக்ஷ்மி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சலவை செய்யும் இடமாகும். இங்குள்ள தொழிலாளர்கள் மொத்தம் ஏறத்தாழ 7000 பேர். இவர்கள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் பகுதி நேரம் முறையில் உழைக்கின்றனர். இவர்களின் மொத்த வருமானம் 100 கோடி ஆகும். துவைத்தல், காயவைத்தல், தேய்த்தல் என அனைத்து வேலைகளையும் செய்து அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. இந்த ஏழாயிரம் பேரும் இப்படியே ஒற்றுமையாக குழுப்பணியாற்றுவதால் இவர்களுக்கு குழப்பங்கள் என்பது எழாமல் உள்ளதாக கூறுகின்றனர் இவர்கள்.
நாம் வாங்கும் பொருள் ஓரிஜினலா கலப்படமா என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக அதிக விலை கொடுத்து வாங்கும் மிளகில் கலப்படத்தை எப்படி கண்டு பிடிப்பது.. இதற்காக சோதனைச்சாலைக்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை.. அதை நீங்கள் வீட்டிலேயே வைத்து கண்டுபிடித்து விடலாம்.. எப்படி என்று பார்க்கலாமா... சிறிய அளவு கருப்பு மிளகு எடுத்து மேஜை மீது வைத்து கட்டை விரலால் இந்த மிளகை அழுத்தவும். அல்லது நசுக்கவும். மிளகு அவ்வளவு எளிதில் உடையாது. ஆனால் அதில் கலப்பட மிளகு இருந்தால் நீங்கள் அதை நசுக்க முடியும். நசுக்கப்பட்ட மிளகு ஒளி வெளிர் கருப்பட்டிகளாக மாறும். மிளகை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். மிளகு தரமானதாக இருந்தால் தண்ணீரின் அடியில் மூழ்கி விடும். மிளகு போலியானதாக இருந்தால், பப்பாளி விதையாக இருந்தால் அது நீரில் மிதக்க செய்யும். மிளகை கடித்தால் காரத்தன்மையுடன் இருக்கும். பப்பாளி விதையாக இருந்தால் அது வாசனை தன்மையற்று, சுவையற்று சுருங்கி இருக்கும்.
ஆறே வயதான ரியான் என்ற சிறுவன் தனது பொம்மைகளை மதிப்பீடு செய்யும் வீடீயோவை பிரபலமான யூடியூப்பில் அப்ளோடு செய்ததின் மூலம் ஒரு வருடத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை அச்சிறுவன் ஈட்டியுள்ளான். பொம்மைகளை அதிகமாக விரும்பும் ரியான் எந்த ஒரு பொம்மை வாங்குவதற்கு முன்பும் அதன் மதிப்பீடு பற்றி ஆராய்ந்த பின்பே அதனை வாங்குவார். தனது நான்கு வயதிலேயே தனது பெற்றோரின் உதவியுடன் தனது 'ரியான் டாய்ஸ் ரெவியூ' (Ryan Toysreview) என்கிற யூடியூப் சேனலை மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு துவங்கினர். ஆரம்பத்தில், ரியனின் காணொளி பிரபலமடையவில்லை ஆனாலும் ரியான் மற்றும் அவனது பெற்றோர்கள் விடாமுயற்சியாக தினந்தோறும் ஒரு காணொளியை பதிவேற்றம் செய்தனர் . ஜூலை 2015 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட ரியனின் 'ஜியன்ட் எக்க் சர்ப்ரைஸ் '(Giant Egg Surprise) என்ற காணொளி இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவை இதுவரை 800 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்த யூடியூப் சேனலின் மூலம் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே மாதம் பத்து லட்சமாகும் . இந்த யூடியூப் சேனல் இதுவரை 1 கோடி ரசிகர்களை கொண்டுள்ளது .
சேலையை பெண்கள் மட்டும் தான் அணிய வேண்டுமா என்ன, நாங்களும் கட்டி அசத்துவோம்ல என கிளம்பிவிட்டால் மேற்கு வங்க ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். புஷ்பக் சென் என்ற அந்த துடிப்பு மிக்க 26 வயது இளைஞர்தான் தற்போது கொல்கட்டா வீதிகளில் சென்சேஷன். ஆடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது, அது பார்ப்பவரின் தலையில்தான் இருக்கிறது என உறுதிபட சொல்கிறார். தலையில் உச்சி குடுமியும், அடர்ந்த தாடியும், கட்டுமஸ்தான உடலுமாக புஷ்பக் சென், கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் சேலை கட்டி கொல்கத்தா வீதிகளில் நடந்து செல்லும் போது அனைவரின் கண்களும் இவரையே மொய்க்கின்றன. இவர் இத்தோடு விட்டாரா வெளிநாடுகளுக்கு சென்று சேலைகளில் பேஷன் ஷோ, தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போட்டோ ஷூட் என அசத்தி வருகிறார். இவர் சேலையுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
நுங்கு சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. மேலும், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.