முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோடீஸ்வரர் பிச்சை

கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழரான சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6.5 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.

சாதனை வைரம்

ஹாங்காங்கில் சொதேபி என்ற ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் 59.6 கேரட் அளவிலான அரிய வகை இளம்சிவப்பு நிற வைரம் ஏலம் விடப்பட்டது. இதை நகை வியாபாரி ஒருவர் சுமார் 463 கோடிக்கு ஏலம் எடுத்தார்.  இதன்மூலம் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வைரம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

பருக்கள் மறைய...

முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, பின் 2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, அதில் 2 ஸ்பூன் கற்பூர எண்ணெய், ரோஸ் வாட்டர் சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு ஃபேஸ் மாஸ்க் தயார்  செய்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

கூடும் ஆயுட்காலம்

பெண்களின் சராசரி ஆயுட்காலம் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட வளர்ந்த நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவின்படி, நவீன மருத்துவ உலகில் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 2030-களில் தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 88 வயதை எட்டக்கூடுமாம்.

இனி தண்ணீரை குடிக்க வேண்டாம் - அப்படியே மென்று சாப்பிடலாம்

எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையே நல்ல தண்ணீரை பகிர்ந்து கொள்வதில்தான் மிகப்பெரிய சவால்கள் அடங்கியுள்ளதாக அடிக்கடி சூழலியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். தற்போது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரால் நமக்கு பயன் என்றாலும் பாவம் பூமி பந்து படாத பாடு படுகிறது. தற்போது அதற்கு முடிவு கட்ட வந்து விட்டது Ooho water.  லண்டனை மையமாக வைத்து இயங்கி வரும் ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற ஆய்வகம் கடற்பாசி மற்றும் தாவரங்களை பயன்படுத்தி திட வடிவிலான தண்ணீரை கண்டுபிடித்துள்ளது. இதனால் தண்ணீரை பாட்டிலில் அடைக்க வேண்டிய தேவை இருக்காது. மேலும் தாகம் எடுக்கும் போது இதை அப்படியே எடுத்து மெல்ல வேண்டியதுதான். பார்ப்பதற்கு நிறமற்ற நம்மூர் ஜவ்வுமிட்டாய் போல காணப்படும் இந்த Ooho வாட்டர் வாயில் போட்டதும் அப்படியே கல்கண்டாய் கரைந்து விடுகிறது. இயற்கையான முறைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

விஞ்ஞானி டார்வினின் செல்ல பிராணி

உயிர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து முதன் முதலாக உலகுக்கு புதிய அறிமுகத்தை செய்தவர் சார்லஸ் டார்வின் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது செல்ல பிராணி எது தெரியுமா.. ஆமை தான். தொடக்கத்தில் அது செல்லப்பிராணியாக இல்லை.. கலபகோஸ் தீவுகளுக்கு அவர் சென்ற பிறகு, அதற்கு ஹாரியட் என பெயரிட்டு வளர்த்தார். ஆனால் தனது உரிமையாளரை காட்டிலும் 126 ஆண்டுகள் அந்த ஆமை உயிர் வாழ்ந்தது. அதாவது 176 வயதில் கடந்த 2006 இல் அது உயிரிழந்தது. ஹாரியட்டை இறுதியில் வளர்த்தவர் பிரபல முதலை வேட்டையாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இர்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago