முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நுங்கின் பயன்

நுங்கு சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. மேலும், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் கோடிகளை குவிக்கும் இளைஞர்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த மோகித் சுரிவால். வயது வெறும் 17க்கும் கீழே. ஆனால் இவரது ஆண்டு வருவாய் கோடிக்கும் மேலே. அதுவும் ஒரு சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. இவர் செய்தது என்ன...இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இளசுகள் சும்மா கடலை வறுக்கும் நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டார் மோகித். உலகத்தின் அனைத்து பிராண்டுளின் கன்டென்டுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஹிட்டாக்கினார். ஒரு கட்டத்தில் அவரது வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் மனம் தளராமல் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ, யூடியூப் என கலக்கி வருகிறார். தற்போது அவரது காட்டில் பண மழை கொட்டி வருகிறது.

உலகில் வியர்க்காத விலங்கு எது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

உலகின் வியர்க்காத விலங்கு எது.. அல்லது சேற்றில் திளைக்கும் விலங்கு எது எப்படி கேட்டாலும் பதில் ஒன்றுதான்.. சொல்லாமலேயே தெரிந்திருக்கும் அவை பன்றிகள் தான் என்று. ஏன் பன்றி போல் வியர்க்கிறீர்கள் என ஆங்கிப பழமொழி உள்ளது. ஆனால் உண்மையில் பன்றிகளுக்கு வியர்ப்பதில்லை. அவற்றின் உடலில் வியர்வை சுரப்பிகள் கிடையாது. எனவேதான் அவை தனது உடல் வெப்பத்தை தணித்துக் கொள்வதற்காக நீர்பாங்கான சேற்றில் அவ்வப்போது புரண்டு வெப்பத்தை தணித்துக் கொள்கின்றன. நீர் பாங்கான இடம் கிடைக்காத போதுதான், எந்த வகையான நீர் நிலையாக (சாக்கடையானாலும்) இருந்து இறங்கி அதில் புரள்கின்றன. எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.

புதிய யுக்தி

சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்படும் போது, ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைகளை இயல்பான மனநிலையில் இருக்கச் செய்ய அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மருத்துவமனை சிறாரே ரிமோட் கண்ட்ரோல் காரில் செல்லும் வகையிலான புதிய வசதியை உருவாக்கி உள்ளனர். இதனால் சிறார் மற்றும் பெற்றோருடைய பதற்றம் தணிகிறதாம்.

புதிய இனம்

அமெரிக்காவின் வடக்கு மொன்டானா மாகாணத்தில் சுமார் 75 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு டாஸ்பிளட்டோசரஸ் ஹார்னரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதியவகை டைனோசரின் உடலமைப்பு, முதலைகள் போன்று இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

சிறந்த நகரம்

உலகளவில், சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வில் ஆஸ்ட்ரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக தேர்வாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் உள்ளது. ஆசியாவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago