முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொடிய விஷமான சயனைடே உயிர்கள் உருவாக காரணமாம்

உயிரை எடுக்க கூடிய சயனைடே உயிர்கள் உருவாக காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.  புதிய ஆராய்ச்சியில் ,  கொடிய சயனைடு  கலவை, உண்மையில், பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது. விஞ்ஞானிகள் சயனைடைப் பயன்படுத்தி ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்கியுள்ளனர்,சயனைடு நான்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்கத் உதவியது என கண்டறிந்து உள்ளனர். சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரோஜன் அணுக்களால் உருவானது. இதன் அறிவியல் பெயர் சிஎச் (CH). இதை உட்கொண்டால் உடனே மரணம் தான். பிழைத்தாலும் வாழ்நாள் எல்லாம் நரம்பு சம்பந்த பட்ட நோய்களால் அவதி பட நேரிடும். இதுகுறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம், மேலும் வேற்றுகிரகவாசிகளை கண்டறிய நமக்கு  உதவலாம்' என்று கூறி உள்ளனர். ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் ராமநாராயணன் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கிரகங்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும்போது - நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம். இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.

இந்தியாவின் மர நகரம் எது தெரியுமா?

ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மிகவும் பெரியது

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படும், உலகின் மிக ப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்-ஐ, 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஞ்சு கயானாவிலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்த நாசா முடிவு செய்துள்ளது. அகசிவப்பு கதிர்களைக் ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் தொலை தூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும்.

'டூ இன் ஒன்' விமானம்

நீரிலும், வானிலும் செல்லக் கூடிய வகையில் உலகின் மிகப் பெரிய விமானத்தை சீனா தயாரித்து வருகின்றது. இந்த விமானம் வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.AG600 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 37 மீட்டர் மொத்த  நீளமும், 38.8 மீட்டர் நீளமுள்ள இறக்கையையும் கொண்டது. 53.5 டன் சுமைகளை எடுத்துக்கொண்டு புறப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்விமானம், 20 டன் நீரையும் சுமந்து செல்லும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் 4500 கி.மீ பறக்கும் வல்லமை கொண்ட இந்த விமானம் வானில் பறக்கும் போது 53 டன் சுமையை தாங்கக் கூடிய சக்தி கொண்டது.

அகத்தியர் அருவி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள அருவி அகத்தியர் அருவி. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இது வற்றாத ஜீவநதி என்னும் பெயரை பெறுகிறது. இதிலிருந்து உருவாவதுதான் தாமிரபரணி நதி.

பாம்பு கடித்தும் சாகாத மனிதன்

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் 1910 இல் பிறந்தவர் பில் ஹாஸ்ட். இவருக்கு சிறுவயது முதலே பாம்புகள் மீது ஆர்வம் ஏற்பட்டு வந்துள்ளது. 1947 முதல் 1984 வரை புளோரிடாவின்மியாமி செர்பென்டேரியத்தின் உரிமையாளராக இருந்தார். அங்கு வாடிக்கையாளர்களுக்கு பாம்புகளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் வேலையை செய்து வந்தார். பாம்புகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மித்ரிடாடிசம்(mithridatism) என்ற அணுகுமுறையைப் பயன்படுத்தவும் பில் முடிவு செய்தார். அது அவரை பாம்புக்கடியிலிருந்து பாதுகாத்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி அல்லது விஷ எதிர்ப்பை வளர்ப்பதற்காக அதிக அளவில் நச்சுத்தன்மையை உட்கொள்வதற்கான ஒரு நுட்பமாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக 32 வகையான பாம்புகளின் விஷத்தின் கலவையை தினமும் ஊசி மூலம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டதே அவரது பாம்பு விஷத்தை எதிர்க்கும் வெற்றியின் ரகசியம் என சொல்லப்படுகிறது.யானையைக் கொல்லும் அளவுக்கு விஷத்தை கக்கும் திறன் கொண்ட ஒரு பாம்பின் கடியில் இருந்து கூட அவர் உயிர் பிழைத்தார். ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த அபாயகரமான அனுபவங்கள் தவிர்க்க முடியாத மரணத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் வாழ்வில் 173 முறை கொடிய விஷமுள்ள பாம்பு கடியிலிருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago