தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான, கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம். மேலும், தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது. ஆனால், நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்கும் பழக்கத்தினால், இந்தியாவில் 76 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர்.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்காக விற்பனை செய்யப்படும் குடிநீர் குறித்து கன்சுமர் வாய்ஸ் என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் “ரயில் நீர்“ என்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அதிக அளவில் விற்பனை மற்றும் தரமும் நன்றாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டாக இருக்கும் குழந்தைகள் தான், ஆரோக்கியமான குழந்தைகள் என நினைப்பது தவறு. குழந்தை பிறந்த பின், ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், எடை அதிகரிக்காது. தாய்ப்பால் மட்டும் கொடுத்து, 10 கிலோ எடை இருந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.
அசுவமேத யாகம் செய்த சூர்ய வம்சத்தை சேர்ந்த சகரன் எனும் மன்னனின் இறந்துபோன மகன்களுக்கு முக்தி அளிப்பதற்காக கங்கா தேவி பூமியில் பிறப்பெடுத்து கங்கை நதியாக ஓடுவதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே கங்கையில் அஸ்தியைக் கரைத்து தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்கின்றனர்.
ஜப்பான் நாட்டில் வருகிற 2035-ம் ஆண்டிற்குள் மனிதர்களில் பாதி பேர் அலுவலகங்களில் வேலை பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது ஐ.பி.எம். நிறுவனம் மனிதர்களைப்போல செயற்கை அறிவாற்றல் திறன் பெற்ற ரோபட்டுகளை உருவாக்கியுள்ளது. இந்த ரோபட்டுகள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளன. அவை, மருத்துவக் காப்பீடுக்கு அளிக்க வேண்டிய தொகைகளை கணக்கிட்டு மின்னல் வேகத்தில் தெரிவிக்கிறது. இந்த செயற்கை அறிவாற்றல் ரோபட்டுகள் மூலமாக புகுகோகு என்ற மருத்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவினத்தை மிச்சப்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்த நிறுவனத்தின் பாதி ஊழியர்களின் வேலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
நவரச கலைக்கூடம் வழங்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
26 Nov 2024நவரச கலைக்கூடம்" என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற த
-
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
அசோக்குமார் நடிக்கும் லாரா
26 Nov 2024காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.