முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மேற்கத்திய திருமணங்களில் வெள்ளை ஆடை மரபு எப்போது தோன்றியது

நம்மூர் திருமணங்களில் பட்டு சேலையும், பட்டு சரிகை வேட்டியும் உடுத்துவதை மரபாக கொண்டுள்ளோம். ஆனால் மேற்கத்திய திருமணங்களின் போது வெள்ளை நிற உடையில் மணமக்கள் தேவதை போல் காட்சியளிப்பர். இந்த மரபு முதன் முதலில் பிரான்ஸில் தான் தோன்றியது. 1499 இல் 12 ஆம் லூயிக்கும், அன்னாவுக்கும் நடைபெற்ற திருமணத்தின் போதுதான் முதன் முதலில் வெள்ளை ஆடை அணியும் பழக்கம் ஏற்பட்டது. இருந்த போதிலும், 1840 இல் விக்டோரியா மகாராணிக்கும் இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் நடைபெற்ற திருமணத்துக்கு பிறகுதான் வெள்ளை ஆடை மரபு தொடர்ந்து பொது மக்களிடமும் நீடித்து நிலைத்தது.

இந்தியாவின் முதல் ரயில் எங்கு ஓடியது

இந்திய ரயில்வே சுமார் 170 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது சரி இந்தியாவின் முதல் ரயில் எங்கே ஓடத் தொடங்கியது. அப்போது ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு பிற்பகல் 3:30 மணியளவில் அது மும்பையில் நடந்தது. என்ன அது. இன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என மிக பிரமாண்டமாக மிளிரும் அந்த ரயில் நிலையம் அக்காலத்தில் மிகவும் சாதாரணமாக காணப்பட்டது. அதில்தான் இந்தியாவில் அன்றைய தினம் முதல் ரயில் தனது பயணத்தை தொடங்கியது.சரியாக 3.35 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்தில் இருந்து தானேவுக்கு ரயில் கிளம்பியது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் போரிபந்தர் மற்றும் தானே இடையே பயணிக்க165 வருடங்கள் கடந்த பிறகும், இப்போதும் ஒரு மெதுவான பயணிகள் ரயில் இந்த தூரத்தை கடக்க அதே நேரம்தான் எடுத்துக் கொள்கிறது.

மதிக்கும் பிராணி

காகிதப் பணத்தை உலகில் முதன்முதலாகப் புழக்கத்துக்கு விட்டவர்கள் சீனர்கள்தான். கி.மு. 119-ஆம் ஆண்டிலேயே சீனர்கள் காகிதப் பணத்தை உருவாக்கிவிட்டனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டையும் பல விலங்கின ஆண்டுகளாகக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எலி ஆண்டையே மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள்.

அதிசய சிறுமி

சீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், தந்தையால் கைவிடப்பட்ட வாங் அண்ணா என்ற 5 வயது சிறுமி. தனது பாட்டி, கொள்ளு பாட்டியுடன் வசித்து வரும் இவள்,  அவர்களுக்கு சமைப்பது, ஊட்டிவிடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

படிப்புக்கு செலவு

உலகம் முழுவதிலும் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் படிப்புகாக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 8 ஆயிரத்து 481 பெற்றோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியாவுக்கு 13-வது இடமும், இவர்கள் ஒரு குழந்தையின் படிப்புக்காக தொடக்க கல்வி முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை சுமார் ரூ.12 லட்சத்து 35 செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

செல்பி மோகம்

செல்பி மோகத்தால் ஏற்படும் மரணத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா வில் 76 பேரும், பாகிஸ்தானில் 9 பேரும், அமெரிக்காவில் 8 பேரும், ரஷ்யாவில் 6 பேரும், பிலிப்பைன்ஸில் 4 பேரும், சீனாவில் 4 பேரும் இறந்துள்ளனர். இவர்களில் 68% பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 75.5% பேர் ஆண்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago