முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பையோனிக் தோல்

இன்றைய நவீன யுகத்தில் மனிதர்களைப் போன்றே உணர்வுகள் கொண்ட ரோபோக்களை கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ரோபோக்களின் கை, கால்களில் மனிதனை போன்று தொடு உணர்ச்சியை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3டி அச்சிடப்பட்ட தொடுதிரை சென்சார்களை பயன்படுத்தி, 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பியோனிக் தோலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ரோபோக்களுக்கு தொடுதல் உணர்ச்சியை கொடுத்துள்ளனர், மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர். 4 அடுக்குகளை கொண்ட, 3D பிரின்டர் பயன்படுத்தி மின்னணு உணர்ச்சி கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். வருங்காலத்தில் உணர்வுகளுடன் சுயமாக சிந்திக்கும் திறனையும் ரோபோக்கள் பெற்று மனிதனின் மறு உருவமாக ஜொலிக்கும் என்பதே ஆராய்ச்சிகளின் கருத்து.

ஆழ்கடலில் வாழும் அரிய வகை பேய் சுறா கண்டுபிடிப்பு

நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை பேய் சுறா மீனை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் சிறிய மீன்வகை என்றும், ஆழ் கடலில் நிழலான பகுதிகளில் வாழக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர். இதை தென் தீவுக்கு அருகே, சுமார் 1.2 கி.மீ. ஆழ்கடலில் கண்டுபிடித்து உள்ளனர், என்று தெரிவித்துள்ளனர். இந்த பேய் சுறா மீன்கள் - சிமேரா என்றும் அழைக்கப்படும் என்றும், இது மிகவும் அரிதாகவே காணப்படும், அதிலும் அவற்றின் குட்டிகளை பார்ப்பது இன்னும் அரிதானது. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்த பேய் சுறா மீன் இளம் பருவ நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த வகையான மீன் குட்டிகளின் இளம் பருவ நிலையை பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

காதலிக்காக பீச்சில் நிரப்புவதற்காக மணலை வாங்கியவர் யார் தெரியுமா?

யாரும் இதுவரை பார்க்காத போதிலும் உலக அழகி கிளியோபாட்ரா என்பது வழக்கமாக சொல்லப்படும் விசயம். ஆனால் அதே நேரத்தில் அவள் மிகவும் ஆற்றல் மிக்க பேரரசியாக விளங்கினாள். அவளது காதலன் மார்க் ஆண்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தனது காதலி கிளியோபாட்ராவை மகிழ்விப்பதற்காக எகிப்திலிருந்து மணலை வரவழைத்தான். எதற்கு தெரியுமா துருக்கியில் உள்ள செடிர் தீவில் உள்ள பீச்சை மணலால் நிரப்பி காதலியை மகிழ்விப்பதற்காக. தற்போதும் செடிர் தீவு கிளியோபாட்ரா தீவு என்றே அழைக்கப்படுகிறது. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... அதிலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு காதல் தோன்றினால் என்னவெல்லாம் நடக்கும் பாருங்கள்.

உலகின் மிக நீளமான நதிகள் எங்குள்ளன தெரியுமா?

உலகிலேயே மிகவும் நீளமான நதிகள் மூன்றுதான். அவை நைல், அமேசான் மற்றும் யாங்ட்ஸீ. நைல் நதியின் மூலம் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 11 நாடுகள் பயன் பெறுகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதே போல தென் அமெரிக்காவில் பாயும் அமேசானும் மிகப் பெரிய நதியாகும். இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகவும் நீளமான நதியான யாங்ட்ஸீ சீனாவில் பாய்கிறது. ஆனால் இது மட்டும் தான் ஒரே நாட்டில் பாய்ந்து பலன் அளிக்கிறது.

பிபிசி தமிழோசை

76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவையை நிறுத்துவதாக பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலைகளின் நகரம் எது தெரியுமா?

கேரள மாநிலத்தில் அதிகமான சிலைகளை கொண்டுள்ள நகரம் எது என்று தெரியுமா.. அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தான் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயலகம் முன்பு வைக்கப்பட்ட மாதவராவ் என்பவரின் சிலையில் தொடங்கி தற்போது வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு சிலைகளின் நகரம் என்ற செல்லப் பெயரும் உண்டு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago