முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதையல் புதிது

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

100 மடங்கு வேகம்

தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியுமாம்.

தேங்காய் துருவுவது ஈஸி...

சமையல் செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரியும்.. எது கடினமானது என்றால்... தேங்காயை உடைத்து சில்லை எடுத்து மிக்ஸியில் போட்டு துருவுவது.. அல்லது கேரட் சீவலால் சீவி.. மிக்ஸியில் போட்டு அரைப்பது.. தண்ணீர் ஊற்றவில்லை என்றால் மிக்ஸியில் தேங்காய் சரியாக அரையாது.. இதனால் துருவல் பதத்துக்கு எடுக்க முடியாது.. இனி அந்த கவலை எல்லாம் வேண்டாம்.. சந்தைக்கு வந்துள்ளது table top wet grinder coconut scraper அது என்னங்க.. புதுசா இருக்கு.. அதான்... கிரைண்டரில் பொருத்தி தேங்காயை துருவும் கருவி.. டேபிள் டாப் கிரைண்டரில் அதை பொருத்த வேண்டியது..தேங்காய் மூடியை வைத்து.. சுவிட்சை இயக்கினால்.. பூ மாதிரி தேங்காய் துருவல் ரெடி.. என்ன இல்லத்தரசிகளே.. இல்லத்தரசர்களே.. தேங்காய் துருவ ரெடியா... அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது..பாருங்க.. வாங்குங்க.. ஜாலியா துருவுங்க... இந்த பண்டிகை காலத்தில் தேங்காய் பர்பி செய்து உண்டு மகிழுங்கள்..

புதிய வசதி

ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்பில், சேவ் யுவர் பார்க்கிங் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி காரை எங்கே நிறுத்தினீர்கள் என்பதை பதிவு செய்து கொள்ளலாம். கார் நிறுத்தம் குறித்த கூடுதல் தகவல்களையும் இதில் சேர்க்கலாம் என கூகுள் நிறுவனம், தெரிவித்துள்ளது. கார் நிறுத்த தகவல்களையும் இடத்தையும் புகைப்படமாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

சாக்லேட்டின் தாயகம்

கொலம்பஸ் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்களைப் பயன்படுத்தி வந்ததைக் கண்டு பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு அதனை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.கி.பி. 1350ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் பயன்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்டை கோகா மரங்களில் இருந்து பெற்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டிலும் இத்திரவப் பொருள் ஓர் உணவாகப் பரவியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் இது ஸ்பெயினில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது என பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உடலுக்கு தீங்கற்றது என அரசு சான்றளித்த பிறகே 1650 இல் மக்கள் பானமாக மாறியது. பின்னர் பிரெஞ்சுக்காரர் அதை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். 18 ஆம் நூற்றாண்டில் தான் இங்கிலாந்துக்குள் நுழைகிறது சாக்லேட். சுவிஸ் நாட்டு கெய்லர் சாக்லேட்டை கட்டிகளாக மாற்றி பரவ செய்தார். காட்பரி சகோதரர்களான புரோஜான் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் விதவிதமான மூலப்பொருட்கள் கலவையுடன் சுவையான சாக்லேட் பண்டங்களை உருவாக்கினர்.கோஹன்ரிட் ஜே. வான் ஹட்டன் என்ற டச்சு நாட்டு வேதியியல் அறிஞர் 1860 ஆம் ஆண்டில் சாக்லேட் திரவத்தை, சாக்லேட் தூளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பச் செயல் முறையைக் கண்டுபிடித்தார். இக்கோட்பாட்டின் அடிப்படையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டேனியல் பீட்டர் என்பவர் பால் சாக்லேட்டைத் தயாரிக்கத் துவங்கினார்.தற்போது இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் வகை வகையான சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. 2 ஆம் உலகப் போரின் போது வீரர்களுக்காக விதவிதமான சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டன

வெள்ளை சர்க்கரை என்ற சீனியை கண்டுபிடித்த நாடு எது தெரியுமா?

நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் சுவையான பொருள் வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனி. கரும்பு, பீட்ரூட், பனை போன்றவற்றிலிருந்து தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வெள்ளை நிறத்தில் கிடையாது. பழுப்பு நிறத்திலேயே வந்தது. அதை வெள்ளையாக மாற்றியது யார் தெரியுமா... இந்தியர்கள்தான். வெள்ளை சர்க்கரையாக பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்களை நமது இந்தியா தான் முதல் முதலில் உருவாக்கியுள்ளது. சர்க்கரை தயாரிக்கும் முறை இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் சீனா, பெர்சியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பரவி இறுதியில் 13 ஆம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சர்க்கரை ஒரு அரிய பொருளாகவும் மிகவும் விலையுயர்ந்த பொருளாகவும் கருதப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago