Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மக்கள் கொடுத்த நிலத்தை மறுத்த நாடக மேதை யார் தெரியுமா?

தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர் என போற்றப்பட்டவர் பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார். நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ஆச்சாரப்பன் தெருவில்தான். ஆனால் தன் பெயருக்கு முன்னால், தன் முன்னோரின் ஊரான ‘பம்மல்’ என்பதை போட்டுக்கொண்டார். அந்த ஊர் மக்கள், அவரால் தங்கள் ஊருக்கு பெருமை கிடைத்ததற்காக தங்கள் அன்பின் அடையாளமாக சில ஏக்கர் நிலத்துக்கான உரிமையை அவருக்கு வழங்கினர். ஆனால் அவரோ ‘‘உழுபவனுக்கே நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.எனக்கு எதற்கு நிலம்?’’ என்று கூறி மறுத்துவிட்டார்.

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

கோடீஸ்வரர் பிச்சை

கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழரான சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6.5 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.

போபாப் : தண்ணீரை சேமித்து வைக்கும் அதிசய மரம்

இயற்கை எப்போதும் விநோதங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதில் போபாப் எனப்படும் மரமும் ஒன்று. இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா... தென் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் வாழக் கூடியவை. போபாப் (Baobab) என்ற இந்த மரங்களை அங்கே Gentle Giants என்கின்றனர். இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் வறட்சியை தாக்குபிடித்து வளர்பவை. அதே நேரத்தில் மண்ணிலிருந்து எடுக்கும் நீரை இந்த மரங்கள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. மழை இல்லாத வறண்ட காலங்களில் அப்பகுதி மக்கள் இந்த மரத்தில் துளை போட்டு நீரை எடுத்துக் கொள்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... சிலர் இவற்றை தமிழகத்துக்கும் கொண்டு வந்தனர். மதுரை பார்ச்சூன் ஹோட்டல், பெங்களூரு அருகே சாவனூரில் 500 ஆண்டுகள் பழமையான மரம், சென்னை அடையாறு தியோசபிகல் வளாகத்தில் பராமரிக்கப்படும் இவற்றை நாம் பார்க்கலாம்.

உலகிலேயே அதிகமான பிரமிடுகள் எந்த நாட்டில் அமைந்துள்ளன?

பிரமிடுகள் என்றாலே நமக்கு நினைவக்கு வருவது எகிப்துதான். பிரமிடுகளும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மி எனப்படும் பழங்கால சடலங்களும் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்துபவையாகும். ஆனால் உலகிலேயே அதிகமாக பிரமிடுகள் உள்ள நாடு எகிப்து என்று நீங்கள் நினைப்பீர்களேயானால்.. அது முற்றிலும் தவறு. அதிகமான பிரமிடுகள் உள்ள நாடு சூடான் தான். எகிப்து நாட்டில் 138 பிரமிடுகள் உள்ளன என்றால் சூடானில் 244 பிரமிடுகள் உள்ளன. சூடான் நாடு நைல் நதி நாகரிகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டான நாடாகும். கிபி 1070 தொடங்கி கிமு 350 வரையிலும் குஷார்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள்தான் சூடானில் பிரமிடுகளை உருவாக்கினர். எகிப்து பிரமிடுகளின் உயரம் சுமார் 400 அடி என்றால் சூடானில் அவை சுமார் 100 அடி கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.

முதல் ஏ.டி.எம்

50 ஆண்டுகள் ஆன, ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்லேஸ் வங்கி இந்த முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.  ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago