முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இணையதளத்தை நகலெடுக்கலாம்

நல்ல அதிவேக இணைய வசதி அன்லிமிட்டெட்டாக கணக்கின்றி இருக்கும் போது நல்ல இணையத்தளங்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டால் இணையம் இல்லாத நேரங்களிலோ குறைந்த வேகத்தில் இருக்கும்போதோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிச் செய்வதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் 'எச்டிடிராக் வெப்சைட் காப்பியர்.  இந்த மென்பொருள், கட்டற்ற, இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  இதை https://www.httrack.com/  தளத்திற்குச் சென்று  பதிவிறக்கிக் கொள்ளலாம். விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா,  7, 8, லினக்ஸ் டெபியன், உபுண்டு, ஜென்டூ, ஃபெடோரா, ஆண்டிராய்டு  ஆகிய இயங்குதளங்களில் எச்டிடிராக்கை நிறுவிக்கொள்ளலாம். முக்கியமான இணையத்தளங்களை செல்போனிலேயே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் எச்டிடிராக்.

ஃபேஸ்புக்கில் சுவாரிஸ்யம்

ஒவ்வொரு ஆண்டும் ஃபேஸ்புக் நிறுவனம், அதிகம் விவாதிக்கப்பட்டது குறித்து வெளியிட்டு வருகிறது. இதில் 2016-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட பட்டியலில் இந்தியாவில் தீபாவளி முதலிடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்க அதிபர் அரசியல் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முகமது அலி, போக்கிமான் கோ ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கிரிக்கெட், உரி தாக்குதல், தோனி திரைப்படம், ஹார்டுவெல், பிரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ், போகிமான் கோ, பதான்கோர்ட் மற்றும் ஐபோன் 7 ஆகியவை முதல் 10 இடத்தில் உள்ளன.

மற்றொறு கோள்

சூரியக்குடும்பத்தில் இதுவரை 9 கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதி இல்லை எனக்கூறி அது நீக்கப்பட்டது.  இந் நிலையில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த விண்பொருளின் காந்த விசையை பொருத்தே அது கோளா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

பிராணாயாமம்

தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் அபாயமும் உண்டாகிறது. நீங்கள் இரவு நேரத்தில் அமைதியான நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை பெற சந்திர பத்னா பிராணயாமம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மிகவும் எளிய பயிற்சியான இது, உடலையும் மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஆஸ்துமாவுக்கு ...

கணேச முத்திரை உடலில் உள்ள 6 ஆதார சக்கரங்களில், நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மூச்சை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்து, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்தால் மிகுந்த பயன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago