முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் பிரட் பால்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

சிக்கன் பிரட் பால் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - 1/2  கிலோ.
  2. பிரட் துண்டுகள் - 12.
  3. உருளைக்கிழங்கு - 2.
  4. நீளமாக நறுக்கிய பச்சை குடைமிளகாய் -1.
  5. நீளமாக நறுக்கிய சிகப்பு குடைமிளகாய் - 1/2.
  6. சோம்பு தூள் - 1 ஸ்பூன்.
  7. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  8. மையோனஸ் - 100 கிராம்.
  9. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
  10. பிரட் கிரம்ஸ் - சிறிதளவு.
  11. சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
  12. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  13. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை வைத்து  நறுக்கிய ½ கிலோ போன்லெஸ் சிக்கன் துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பை  போட்டு கலந்து விட்டு மூடி போட்டு மூடி 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து எடுத்து சிக்கனை வடி கட்டி பின்னர் சிக்கனை மசித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  2. அடுப்பில் குக்கரை வைத்து  நறுக்கிய 2 உருளைக்கிழங்கை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பை போட்டு கலந்து விட்டு மூடி போட்டு மூடி 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து எடுத்து உருளைக்கிழங்கை வடி கட்டி பின்னர் மசித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  3. ஒரு தட்டில் 12 பிரட் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் ஓரத்தில் உள்ள பகுதியை நறுக்கி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  4. மீதம் உள்ள பிரட் துண்டுகளையும்  இதை போல் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் வேக வைத்து மசித்து எடுத்து வைத்துள்ள சிக்கனையும்,வேக வைத்து மசித்து எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் போடவும்.
  6. இதனுடன் நீளமாக நறுக்கிய ஒரு பச்சை குடைமிளகாய்,நீளமாக நறுக்கிய ½ சிகப்பு குடைமிளகாய்,சோம்பு தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் 1/2 ஸ்பூன்,மையோனஸ் 100 கிராம்,மிளகாய் தூள் 1 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
  8. தயார் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளை தண்ணீரில் முக்கி எடுத்து பிழிந்து பிரட்மேல் மசாலா கலந்த சிக்கனை சிறிதளவு வைத்து உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  9. ஒரு பாத்திரத்தில் பிரட் கிரம்ஸ் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
  10. தயார் செய்து வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை பிரட் கிரம்ஸில் போட்டு சிக்கன் உருண்டையின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து  தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. இதே போல் மீதம் உள்ள சிக்கன் உருண்டையும்  தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  12. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  13. எண்ணெய் சூடானவுடன் உருட்டி வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு  பொரிக்கவும். 
  14. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  15. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  16. சுவையான  சிக்கன் பிரட் பால் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago