முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க மெட்ரோ ரயில் சேவை: மும்பையில் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      இந்தியா
Vande-Bharat-Start-up 2023-05-25

Source: provided

மும்பை : மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 5) கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.

நவராத்திரி பரிசாக பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் - ஆரே ஜேவிஎல்ஆர் பிரிவு இடையே நகரின் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை இன்று முதல் தொடங்க உள்ளது.  மும்பை மெட்ரோ நிர்வாகம் சார்பில் கஃபே பரேடில் இருந்து ஆரே வரை மூன்று கட்டங்களாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் (ஆரே முதல் பிகேசி) பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், நவராத்திரி பரிசாக ரூ.14.120 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கிவைத்து, ரயிலில் பயணம் செய்ய உள்ளார். திங்கள்கிழமை முதல் ரயில் சேவைகள் தொடங்க உள்ளது. காலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும், நெரிசல் நேரங்களில் சுமார் ஆறு நிமிட இடைவெளியிலும், நெரிசல் இல்லாத நேரத்தில் 15-20 நிமிட இடைவெளியிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 வரை சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து