முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      தமிழகம்
Fairman 2023 06 13

Source: provided

சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகை, மயிலாடுதுறை துறைமுகங்களில் இருந்து 3 விசைப்படகுகளில் கடந்த மாதம் 21-ம் தேதி 37 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்தனர்.

மேலும் மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்கள் பயன்படுத்திய 3 விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதனால் மீனவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து