முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டோம் : வடகொரிய அதிபர் கிம் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      உலகம்
Kim-Jong-Un 2023 03 30

Source: provided

சியோல் : எதிரி நாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியாவும் பல்வேறு கூட்டு ராணுவ பயிற்சிகள் மற்றும் ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனிடையே தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற ராணுவ தினத்தின்போது அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் பேசுகையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவப்படை தகுந்த பதிலடியை கொடுக்கும் எனவும், வடகொரிய அதிபர் கிம்மின் ஆட்சி விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் எச்சரித்தார்.

இந்த நிலையில், வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரி நாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு தென் கொரிய அதிபரின் பேச்சை கடுமையாக விமர்சித்த அவர், பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியை யார் அழிக்கிறார்கள் என்பதை இந்தக் கருத்து காட்டுகிறது என்றார். மேலும் தென் கொரியா தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் கிம் எச்சரித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து