முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேச்சு: பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      தமிழகம்
Pawan-Kalyan 2023-10-05

Source: provided

மதுரை : துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேசியது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதியில் நேற்று முன்தினம் (அக்.03) தரிசனம் செய்த பவன் கல்யாண் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது., இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது” என தெரிவித்தார்.

இந்நிலையில் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்ய மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் மனு அளித்துள்ளார். அதில் திருப்பதி லட்டு பிரச்சினையில், எவ்வித தொடர்பும் இல்லாத சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் ஒருமையில் பேசியுள்ளார். இரு மாநில மக்களிடம் பகையை உருவாக்கும் செயலில் ஈடுபட்ட பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். நடிகர் பவன் கல்யாண் பேச்சு இந்திய தண்டணை சட்டம் 196 (a), (b) & 197 (1) (d) மற்றும் 352 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து