முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் திடீர் ரத்து

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      தமிழகம்
Chennai-Airport 2024-10-01

Source: provided

சென்னை : சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் நேற்று 5 வருகை விமானங்கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டன. 

இலங்கை, பெங்களுரு, மும்பை, அந்தமான், மதுரை ஆகிய இடங்களில் இருந்து வருகை தரும் 5 விமானங்களும், சென்னையில் இருந்து இலங்கை, பெங்களுரு, மும்பை, அந்தமான், மதுரை ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து காலை 7.45 மணிக்கு அந்தமான் புறப்பட்டு செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு பெங்களூர் புறப்படும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூரு செல்லக்கூடிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பிற்பகல் 3.25 மணிக்கு மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்திற்கு காலை 7.05 மணிக்கு பெங்களூரில் இருந்து வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.05 மணிக்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் 1 மணிக்கு, அந்தமானில் இருந்து வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, மதுரையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.40 மணிக்கு, இலங்கையில் இருந்து வரும் ஏர்இந்தியா விமானம், ஆகிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான சேவைகள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதால் பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து