முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மதுரை மட்டன் கறி தோசை.

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

மதுரை மட்டன் கறி தோசை செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. மட்டன் – 300 கிராம்.
  2. தோசை மாவு - 1 கப்.
  3. தக்காளி - 2.
  4. சின்ன வெங்காயம் - 15.
  5. இஞ்சி – 10 கிராம்.
  6. பூண்டு - 5 கிராம்.
  7. உப்பு - தேவையான அளவு.
  8. மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்.
  9. மஞ்சள் தூள் - 2 டேபிள் ஸ்பூன்.
  10. மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்.
  11. சீரக தூள் - 2 டேபிள் ஸ்பூன்.
  12. கறி மசால் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  13. முட்டை - 2.
  14. கொத்தமல்லி – சிறிதளவு.
  15. ரிபைன்ட் ஆயில் - 500  மில்லி.

 

Method: 

 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் குக்கரை வைக்கவும்.
  3. நன்கு காய்ந்த உடன் சிறிதளவு,ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய 10 கிராம் இஞ்சி,5 கிராம் பூண்டு போட்டு வதக்கவும்.
  5. பொடியாக நறுக்கிய 15 சின்ன வெங்காயம் மற்றும்  தேவையான அளவு உப்பு நன்றாக வதக்கவும்.
  6. பொடியாக நறுக்கிய 2 தக்காளியை போட்டு வதக்கவும்.
  7. மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன்,மல்லி தூள் 2 டேபிள் ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  8. 300 கிராம் மட்டன் போட்டு நன்றாக கிளறி விடவும்.
  9. மல்லி தூள் 2 டேபிள் ஸ்பூன்,சீரக தூள் 2 டேபிள் ஸ்பூன்,சிறிதளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை நன்கு வேகவிடவும்.
  10. 3 விசில் வந்து விட்டது திறந்து பார்க்கலாம்,மட்டன் நன்கு வெந்து விட்டது, இதில் கறி மசால் தூள் 1 டேபிள் ஸ்பூன் போட்டு கலந்து விடவும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. அடுப்பில் தோசை தவாவை வைத்து நன்கு சூடு படுத்தவும்.
  12. தவா காய்ந்ததும் ஒரு தோசை ஊற்றி, சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  13. தயார் செய்து  வைத்துள்ள  முட்டை கலவையை சிறிதளவு ஊற்றி பரப்பி விடவும்.
  14. அதன் மேல் மட்டன்  கலவையை சிறிதளவு போட்டு  பரப்பி விட்டு வேக விடவும்.
  15. திருப்பி போட்டு வேக விடவும்.
  16. முன்னும்,பின்னும் பிரவுன் கலர் வரும் வரை திருப்பி திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.
  17.  நல்லா வெந்திருச்சி எடுத்துலராம்
  18. சுவையான மதுரை மட்டன் கறி தோசை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago