முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மிளகு குழம்பு

Cooking time in minutes: 
20
Ingredients: 

மிளகு குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. துவரம் பருப்பு - ஒரு ஸ்பூன். 
  2. கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்.
  3. சீரகம் - ஒரு ஸ்பூன். 
  4. மிளகு - ஒரு ஸ்பூன். 
  5. பொடியா நறுக்கிய தேங்காய் சில்  -  3. 
  6. மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்.
  7. மல்லித்தூள் - 2 ஸ்பூன். 
  8. மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன். 
  9. நல்லெண்ணெய் - தேவையான அளவு. 
  10. கடுகு,உளுந்து - ஒரு ஸ்பூன். 
  11. பூண்டு - 6 பல். 
  12. கறிவேப்பிலை - 15. 
  13. சின்னவெங்காயம் - 15.
  14. புளி - சிறிதளவு.
  15. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  2. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு,ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு,ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு போட்டு நன்றாக வறுத்து  எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  3. அடுப்பில் கடாய் வைத்து பொடியா நறுக்கிய 3 தேங்காய் சில்லை  போட்டு நன்றாக வறுத்து  எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  4. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்,2 ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  5. ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள எல்லா பொருட்களையும்  போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 50 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு,உளுந்து, 6 பல் பூண்டு, 15 கறிவேப்பிலை, 15 சின்னவெங்காயம் போட்டு வதக்கவும்.
  9. மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை போட்டு கலந்து விடவும்.
  10. தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
  11. இதனுடன் ஒரு கப் தண்ணிர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு கலந்துவிட்டு 5 நிமிடம் கடாய்யை மூடி போட்டு மூடி வேக விடவும்.5 நிமிடம் ஆகிவிட்டது,மூடியை திறந்து சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி கலந்து விடவும்.
  12. இப்போது அடுப்பில் குழம்பை இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான மிளகு குழம்பு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago