முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை உருளை கிழங்கு ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

முட்டை உருளை கிழங்கு ப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 3.
  2. முட்டை - 2
  3. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு.
  4. சீரகத் தூள் - ஒரு ஸ்பூன்.
  5. வெஜிடேபிள் ஆயில் - ஒரு ஸ்பூன்.
  6. மைதா மாவு - 2 ஸ்பூன்.
  7. எண்ணெய் - சிறிதளவு.
  8. உப்பு - தேவையான  அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 3 உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக  துருவி வைத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு  நன்றாக கலந்து விட்டு உருளைக்கிழங்கை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. 10 நிமிடங்கள்  கழித்து ஊற வைத்த உருளைக்கிழங்கை பிழிந்து தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் ஊற்றி கொள்ளவும்,இன்னொரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை ஊற்றவும்,இப்படி 2 முட்டைகளையும் 2 பாத்திரத்தில் உடைத்து ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
  5. முட்டையின் மஞ்சள் கரு உள்ள பாத்திரத்தில் உள்ள 2 மஞ்சள் கருவையும் தனித்தனியாக 2 பாத்திரத்தில் பிரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்தில்  ஊற வைத்த உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும்.
  7. இதனுடன் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் ஊற்றி,பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, தேவையான  அளவு உப்பு,சீரகத் தூள் ஒரு ஸ்பூன்,வெஜிடேபிள் ஆயில் ஒரு ஸ்பூன் மற்றும் மைதா மாவு 2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து  வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன்  எண்ணெய்யை ஊற்றவும்.
  9. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் முட்டை கலவையை சிறிதளவு ஊற்றி பரப்பி விட்டு நடுவில் குழி உள்ளது போல் செய்து கொள்ளவும்.
  10. நடுவில் உள்ள குழியில் முட்டையின் மஞ்சள் கருவை ஊற்றி பொரிக்கவும்.
  11. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
  12. சுவையான முட்டை உருளை கிழங்கு ப்ரை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago