முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.80 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னை விமான நிலையத்திற்கு மஸ்கட் மற்றும் சவுதியில் இருந்து ரூ.2.80 கோடி மதிப்புள்ள  8 கிலோ தங்கம் கடத்தி வந்த 3 பேரை டிஆர்ஐ அதிகாரிகள் கைது   செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து வரும்  பயணிகள் அடிக்கடி தங்கம் கடத்தி வருவதும் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் , இன்று அதிகாலை  மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக டிஆர்ஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்ததகவலின் படி   மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கொண்ட 7 பேர் கொண்ட குழு ஒன்று  நேற்று  அதிகாலை அதிரடியாக விமான நிலையத்திற்குள் புகுந்து சுங்கத்துறை பகுதிகளில்  சோதனை செய்தனர். அப்போது சந்கேகத்திற்கு இடமான வகையில் 2 பயணிகளை சோதனை செய்தனர். அப்போது கேரளா மாநிலம் தலைச்சேரி பகுதியைச்சேர்ந்த முகமது நிசாம் என்ற பயணி  தனது கைப்பையில் 4 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
 
அதேபோன்று  ராமநாதபுரத்தைச்சேர்ந்த  முகமது மசூத்  என்ற வாலிபர் தனது பெல்ட்டில் அரை கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.இவர்கள் இருவரையும் டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்து அவர்களிடமிருந்து  4.50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மஸ்கட்டிலிருந்து வந்த மற்றொரு பயணியிடமிருந்த 3.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு  ரூ.2.80 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமுது நிசாம் என்ற வாலிபர் ஏற்கனவே  சென்னை, கொச்சி, மஸ்கட் போன்ற இடங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வந்ததும் அவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற அடிக்கடி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருவதால் தங்க கடத்தல் கும்பலுக்கும் முகமுது நிசாம் என்பருக்கும் தொடர்பிருக்கலாம் எ ன்று பல்வேறு கோணங்களில் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தங்கம் கடத்தல் காரர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உதவி செய்த போது தனியார் தொலைகாட்சி ஒன்று நேரில் படம் பிடித்து அம்பலப்படுத்தியது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுபோன்று ஒரு சில சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் தான் அடிக்கடி தங்கம் கடத்தி  வருகிறார்களோ என்ற சந்தேகத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து