முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோடு ஷோ மூலம் அரியானாவில் கெஜ்ரிவால் பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      இந்தியா
Kejriwal 2024-03-20

Source: provided

சண்டிகர் : ஜாமீனில் வெளியே வந்த டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரியானா பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை அரியானாவில் உள்ள யமுனாநகரின் ஜகாத்ரி சட்டப்பேரவைத் தொகுதியில் ரோடு ஷோ மூலம் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் 90 பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராகி வரும் நிலையில், 11 மாவட்டங்களில் 13 இடங்களில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனது பதவியை ராஜிநாமா செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பதவி விலகிய பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டுள்ள முதல் தேர்தல் பிரசாரம் இதுவாகும்.

தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “பாஜகவினர் என்னை சிறைக்கு அனுப்பினார்கள். இப்போது அரியானாவில் இருந்து அவர்களை அரியானா மக்கள் வெளியே அனுப்புவார். முழு அரியானாவும் மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கிறது. மக்கள் அவர்களை எந்த தெருவிலும், எந்த கிராமத்திலும் பாஜகவினரை நுழைய விடுவதில்லை என்பது எனக்கு தெரியும். மக்கள் ஆளும் கட்சி மீது எரிச்சலடைந்துள்ளனர்.

நான் சிறையில் இருந்தபோது ஆம் ஆத்மியின் எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்க முயன்றனர். டெல்லி அல்லது பஞ்சாப்பில் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றார்கள். எங்களுடையது மிகவும் நேர்மையான கட்சி. நான் சிறையில் இருந்து திரும்பினேன். நான் அக்னி பரிட்சையை எதிர்கொள்ள இருக்கிறேன். ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று வந்த பிறகு சீதாதேவி ஒரு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். அதுபோல நானும் ஒரு சோதனையை எதிர்கொண்டுள்ளேன். மக்கள் கெஜ்ரிவால் நேர்மையற்றவன் என என்னை நினைத்தால் எனக்கு வாக்களிக்க வேண்டாம். நான் நேர்மையானவன் என நினைத்தால் மட்டும் எனக்கு வாக்களிக்கட்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து