முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளுக்கு 28-ம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை : தமிழக பள்ளிக்கல்வித்துறை தகவல்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : தமிழகத்தல் பள்ளிகளுக்கு 28-ம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்படுகிறது. அந்த வகையில் கல்வியாண்டு நாட்காட்டியில் 220 வேலை நாட்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை 210 ஆக குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டியையும் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில் கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் தொடங்கியுள்ளது. பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு தொடங்க உள்ளது.

மொத்தத்தில் வருகிற 27-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ம் தேதி (சனிக்கிழமை) முதல் 2-ம் தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து