முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி லட்டு விவகாரம்: அறிக்கையளிக்க தேவஸ்தானத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      இந்தியா
Chandrababu-Naidu 2024-06-2

Source: provided

அமராவதி : ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்த விவகாரத்தில் தேவஸ்தானம் அறிக்கை அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திராவில் இந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தது முதல், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, முன்பு ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் முன்வைத்து வருகிறது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோவில் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தநிலையில், திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். லட்டு விவகாரத்தில் முழுமையான அறிக்கை அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து