முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடுபிடிக்கும் அரியானா தேர்தல் களம்: கெஜ்ரிவால் இன்று பிரசாரம்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      அரசியல்
Kejriwal 2023 04 14

சண்டிகர், அரியானாவின் ஜகத்ரி தொகுதியில் இன்று நடைபெறும் கட்சி பேரணியில் பங்கேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்யவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் தெரிவித்தார்.

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் களைக்கட்டி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செப்.20)ல் ஜகத்ரி தொகுதியில் நடைபெறும் பேரணியில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

மேலும் தப்வாலி, ரானியா, பிவானி, மெஹம், கல்யாத், அசாந்த் மற்றும் பல்லப்கர் தொகுதிகள் உள்ளிட்ட 11 மாவட்டகளில் நடைபெறும் 13 நிகழ்ச்சிகளிலும் வரும் நாள்களில் கெஜ்ரிவால் பங்கேற்பார். அவரது அடுத்த பிரசார அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று சந்தீப் கூறியுள்ளார். 

அரியானாவில் காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முறிவடைந்ததை அடுத்து ஆம் ஆத்மி கட்சி 90 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அரியானாவில் ஆட்சி மாற்றம், கெஜ்ரிவாலின் மாதிரி ஆட்சியை மாநிலத்தில் கொண்டு வருவதை இலக்காகக்கொண்டு, முழு பலத்துடன் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி தயாராக இருப்பதாகவும் பதக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து