முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி பஞ்சாமிர்தம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று விளக்கமளித்துள்ளது.

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியானதை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து, பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது, 'திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற ஒரு நிறுவனம் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறது' என்று சமூக வலைதளத்தில் வதந்தி பரவியது.

இந்நிலையில், இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, "'பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது' என்று அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து