முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடை விமர்சனம்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2023      சினிமா
Gift-review 2023 02 13

Source: provided

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் நாயகன் கார்த்திக் சிங்கா, அந்த இல்லத்துக்குக் கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அந்த பணத்தை அவர்கள் வழியிலேயே சென்று மீட்டெடுக்க முனைவதே கொடை படத்தின் ஒரு வரிக்கதை. நாயகன் கார்த்திக்சிங்கவுக்கு காதல், சண்டை, பாசம் ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம். அதை நிறைவாகச் செய்திருக்கிறார். நாயகி அனயா கதைக்குப் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கிறார். சிங்க முத்துவும் ரோபோசங்கரும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். வில்லனாக வரும் அஜய்ரத்தினம் மற்றும், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, கே.ஆர்.விஜயா, கராத்தே ராஜா உள்ளிட்டோர் கொடுத்த  வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.. அர்ஜூனன் கார்த்திக் ஒளிப்பதிவுக்கும் இசையமைப்பாளர் சிபாஷ்கவிக்கும் பாராட்டுக்கள். ராஜா செல்வம் எழுதி இயக்கியிருக்கிறார். மொத்தத்தில் திரைக்கதையில் கவனம் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் வென்றிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து