முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது - மத்திய அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      இந்தியா
Jaishankar 2023 06 08

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் நிலையை இந்தியா மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தானின் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது. பாகிஸ்தானில் கடந்த மாதம் இந்துக்கள் தாக்கப்பட்ட 10 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் 7 சம்பவங்கள் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பானவை, 2 சம்பவங்கள் கடத்தல் தொடர்பானவை. மேலும் ஒரு சம்பவத்தில் ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சீக்கிய சமூகத்தினருக்கு எதிராகவும் 3 அத்துமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முதல் சம்பவத்தில் ஒரு சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டது, மற்றொரு நிகழ்வில் ஒரு பழைய குருத்வாராவை மீண்டும் திறந்ததற்காக ஒரு சீக்கிய குடும்பம் அச்சுறுத்தப்பட்டது. மேலும் ஒரு சம்பவம் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்தி மதம் மாற்றியது தொடர்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து