முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      தமிழகம்
Vijay 2025-03-28

Source: provided

சென்னை : தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார் என்று த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்... வணக்கம்.. கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது. ஒவ்வொரு குடும்பமும் வாழ் வேண்டும் என்பது நல்ல அரசியலா?.; இல்லை ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்பது நல்ல அரசியலா?. மாநாட்டில் இருந்து தற்போது வரை இடையூறு வந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் தவெக முன்னேறி செல்லும். ரசிகர்கள், தொண்டர்களுக்கு தடை போட நீங்கள் யார்?.

சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அமைதியாக இருக்கிறேன். அணை போட்டு ஆற்றை தடுக்கலாம் காற்றை தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்தால் சூறாவளி காற்றாக ஏன் புயலாக கூட மாறும். பல்வேறு சோதனைகளைக் கடந்துமக்கள் சந்திப்பு தோழர்கள் சந்திப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது இனியும் நடக்கும்.

மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே.... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாதே முதல்-அமைச்சர் அவர்களே.... செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே!... பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே. மக்கள் விரோத ஆட்சியை, மன்னராட்சி போல செய்கிறார்கள். கேள்வி கேட்டால் கோபம் வருகிறது.. விமர்சித்தால் மட்டும் கோபப்படுகிறார் முதல்-அமைச்சர். உங்கள் ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்.

பொண்ணுங்களுக்கு நடக்குற கொடுமைகளை சொல்ல முடியல சார்... இதுல உங்கள அப்பானு சொல்றோம்னு வேற சொல்றீங்க... உங்க கொடுமைகளை அனுபவிக்கும் என் சகோதரிகள்தான் உங்க அரசியலுக்கும், ஆட்சிக்கும் முடிவு கட்டப்போகிறார்கள். திமுக ஓட்டுக்காக காங்கிரஸோடு தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது. கொள்ளையடிக்க மறைமுகமாக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளது. பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என பல போராட்டங்கள் சொல்லி கொண்டே போகலாம். இது அனைத்திற்கும் தவெக உடன் நிற்கும்.

தமிழ்நாடு பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். இதனை நாம் பாத்துக்க வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகள் மனவேதனையை தருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு இந்த கரப்ஷன் கபடதாரி அரசு தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கு இருக்கின்ற ஒரே வழி, இங்கே மக்களாட்சி மலர வேண்டும். அது வர வேண்டும் என்றால், இவர்களை மாற்ற வேண்டும். அதனை செய்ய தவெக தொண்டர்கள் மக்களை தினமும் சந்திக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை கேளுங்கள். அதை தீர்த்தால் நம் மீது நம்பிக்கை வரும். அதன்பின் ஒவ்வொரு வீட்டிலும் தவெக கொடி பறக்கும்.

மாண்புமிகு மோடி ஜீ அவர்களே... என்னமோ உங்க பேரெல்லாம் சொல்ல எங்களுக்கு பயம் மாதிரி சொல்லிடுறீங்க; ஏன் ஜீ... தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி?. தமிழ்நாட்டில் இருந்து வரும் ஜி.எஸ்.டி.யை வாங்கிக்கிறீங்க, ஆனா பட்ஜெட்ல நிதியை தரமாட்றீங்க... இங்க உள்ள பிள்ளைகளுக்கு நிதி தராம மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க. தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்... பலருக்கு தண்ணி காட்டிய மாநிலம் தமிழ்நாடு. இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும். தமிழகத்தில் இரண்டு முனை போட்டிதான். அது தவெக மற்றும் திமுக இடையே தான். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து