முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      உலகம்
Myanmar-earthquake-2025-03-

நைப்பியிதோ, 7.2 ரிக்டர் அளவில்  மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் உருக்குலைந்தன. இதில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. 

மியான்மரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி காலை 11.50 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதன் தாக்கம் மியான்மரை ஒட்டியுள்ள தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது. இதையடுத்து பகல் 12 மணி அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் மியான்மரில் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை இந்திய நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் உறுதி செய்துள்ளது.

தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மியான்மரின் மோனிவா நகருக்கு கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த நாட்டின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காகில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன. சுமார் 17 மில்லியன் மக்கள் பாங்காகில் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர்கள் தங்கியுள்ளனர். நிலநடுக்க பாதிப்பு குறித்த எச்சரிக்கை வந்ததும் அனைவரும் படி வழியாக கீழே இறங்கி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து