முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் இ .பி.எஸ்.க்கு மரியாதை: ஓ.பன்னீர்செல்வம்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      அரசியல்
Ops 2024-12-13

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதையாக இருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. கோவிலாக கருதும் அ.தி.மு.க. அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் இருந்து பிரிந்தது பிரிந்ததுதான்.  தி.மு.க.வை தவிர மற்ற எந்த கட்சியும் அ.தி.மு.க.வுக்கு எதிரி இல்லை. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "தமிழகத்தில் அ.தி.மு.க. எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார்.

ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று, ஆள் வைத்து பேசினார்கள். ஆனால் இதுவரை நடந்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க.வில் நான் இணைய வேண்டுமென்று கூறவில்லை. பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழல் உருவாகும் என கூறுகிறேன்" என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து