முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மைக்கு புறம்பாக பொய் செய்திகளை பரப்பி வருகிறார் : இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      தமிழகம்
Raghupati 2024-10-28

Source: provided

சென்னை : உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமைச் செயலகம், சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை இன்றைக்கு பரப்பிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரைக்கும், நாங்கள் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று சொல்வதிலே எந்தவிதமான தவறும் கிடையாது. கடந்த 20 ஆண்டுகால வரலாற்று புள்ளி விவரங்களை நாம் எடுத்து பார்த்தோமேயானால், அதிகமாக 2012-ஆம் ஆண்டில் நடந்திருக்கின்ற குற்றச் சம்பவங்கள் 1943 - 2013-ல் 1927 - கடந்த ஆண்டில் 1540. மக்கள் தொகை பெருகுகிறது; குற்றச் சம்பவங்கள் பெருகுகிறது என்றெல்லாம் சொல்கின்ற இந்த நேரத்தில், அண்ணா திமுக ஆட்சியில், அம்மையார் ஆட்சியிலும் சரி, எடப்பாடி ஆட்சியிலும் சரி அன்றைக்கு குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். 

ஆனால், ஒரு சில தொடர் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதன் மூலமாக ஏதோ தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கின்ற தவறான தகவல்களை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பரப்பி வருகின்றார். அதற்குக் காரணம் தமிழகத்தை நோக்கி பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த தொழிற்சாலைகள் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழக மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுகிறது. 

இதையெல்லாம் கண்டு பொறாமை கொண்டு தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்கின்ற காரணத்திற்காக, எடப்பாடி பழனிசாமி ஏதோ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இங்கே எதற்கும் அமைதி பூங்கா இல்லை என்ற தவறான தகவல்களை பரப்பி, மக்களை அச்சுறுத்தி வருகின்றாரே தவிர, எந்த இடத்திலும்.

எந்த காலத்திலும் அவர்களுடைய காலத்தில் நடைபெற்றது போல தூத்துக்குடி சம்பவமோ, பரமக்குடி சம்பவமோ அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களோ, கலவரங்களோ எதுவும் எங்களுடைய இந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் கிடையாது. இது ஒன்றே போதும் - தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டான சம்பவம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இன்றைக்கு (நேற்று) சட்டமன்றத்தில், ஜீரோ நேரத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில், எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தலைவர்களிடத்தில் கேட்டார்கள். 

ஆனால், அவர்களுடைய 10 ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட ஒரு நீதி. அதாவது சட்டமன்றம் துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஜீரோ நேரத்தில் நாங்கள் என்ன பிரச்சனையை கிளப்ப இருக்கிறோம் என்பதை பற்றிய புள்ளிவிபரத்தை சட்டப்பேரவை தலைவர் இடத்திலே தந்தால் அவர் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பி பதிலை பெற முடியும். அமைச்சர் பதில் இல்லை என்று சொல்லிவிட்டால் பிரச்சனை மட்டும் எழுப்ப முடியும். 

ஆனால், இன்றைக்கு (நேற்று) அரை மணி நேரத்திற்கு முன்பாக அல்லாமல், சட்டப்பேரவை துவங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு குறைந்தது 7 அல்லது 8 நிமிடங்களுக்கு முன்னால், கொறடா சட்டப்பேரவை தலைவர் இடத்தில் நாங்கள் காவல்துறையைப் பற்றி ஒரு பிரச்சனையை எழுப்பப் போகிறோம் என்று சொன்னாரே தவிர, என்ன பிரச்சனையை எழுப்ப போகிறோம் என்பதை கூட அவர்கள் சொல்லவில்லை. எழுத்து மூலமாக எழுதி தரவில்லை. ஆனால், ஜீரோ நேரத்தில் எழுந்து கொண்டு எங்களைப் பேச அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று சத்தம் போடுவது, எங்களுடைய துணை முதலமைச்சர் உடைய பதிலுரையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு அவர்கள் செய்திருக்கும் செயல் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். 

இந்த அரசை பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சிகளுக்கு தான் இன்றைக்கு (நேற்று) அதிகமான அளவில் வாய்ப்பை தருகின்ற முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லுகின்ற முதலமைச்சர். ஆனால் அரை மணி நேரத்திற்கு முன்னால் கொடுக்க வேண்டும் என்கின்ற விதி இருக்கும்போது, இங்கே நாங்கள் பத்து நிமிடங்களுக்கு முன்பாக ஒரு பிரச்சனையை கிளப்ப போகிறோம் என்று சொல்லிவிட்டு, அது கூட என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் இருந்தால், எப்படி அங்கு பதில் சொல்ல முடியும். 

எங்களுடைய முதலமைச்சரிடத்திலேயே பதில் இருக்கிறது. ஆனால், அதற்காக சட்டத்தை மீறி எதையும் செய்யக்கூடாது என்பதற்காக சட்டப்பேரவை தலைவர் , உங்களுக்கு நான் அனுமதி கொடுக்க முடியாது. நீங்கள் அரை மணி நேரத்திற்கு முன்னால் வந்து தகவலை சொல்லவில்லை என்று சொன்னால் அது குற்றமா? அது தண்டனைக்கு உரியதா? அல்லது அவர்களை அசிங்கப்படுத்துவதா அவமாரியாதை செய்வதா? இவர்கள்தான் சட்டமன்றத்தை அவமரியாதை செய்கின்றார்களே தவிர, இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம் சட்டமன்றத்தினுடைய மரியாதை தருகின்ற அமைப்பாக இருக்கிறது என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து