முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு : ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : சொத்துக்குவிப்பு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வகுரணி சந்தைப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த நீதிபதி என்பவர் வருமானத்துக்கு அதிகமாக மதுரை, திண்டுக்கல் பகுதியில் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

அவர் தனது மனைவி ஆனந்தி, மகள் ஜெயதேவி, மகன் இளஞ்செழியன் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் இந்த சொத்துகளை வாங்கி உள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனக்கு தெரியவந்தது. எனவே, முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி 19.4.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'இந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை நிறைவடைந்து விட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அனுமதி அளித்துள்ளார். ஒரு வார காலத்தில் அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்' என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து