முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி மின்னல் வேக ஸ்டம்பிங்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      விளையாட்டு
Dhoni 2024-03-12

Source: provided

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 56 ரன்கள் அடித்தது.

அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 32 ரன்களில் (16 பந்துகள்) நூர் அகமது பந்துவீச்சில் மகேந்திரசிங் தோனியால் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிக் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது வரை பெங்களூரு அணி 8 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் அடித்துள்ளது. கோலி 12 ரன்களுடனும், ரஜத் படிதார் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். படிக்கல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

_______________________________________________________________________

சிறப்பான பேட்டிங்: கம்மின்ஸ் 

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதின. 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லக்னோ 16.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 26 பந்தில் 70 ரன்கள் எடுத்த்தார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இது முந்தைய போட்டியை விட சற்று மாறுபட்ட விக்கெட்டாக இருந்தது. அதனால் நாங்கள் இங்கு விரைவாக ரன்களைச் சேர்க்க வேண்டி இருந்தது. அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருப்பினும் இதனை ஒரு நல்ல விக்கெட் என்று கூறுவேன். அதுவும் உலகின் இரண்டாவது நல்ல விக்கெட் இதுவாகும். அவர்கள் இப்போட்டியில் மிகவும் நன்றாக பந்துவீசினர். மேலும், அவர்கள் சிறந்த திட்டத்தையும் கொண்டிருந்தனர் இவ்வாறு அவர் கூறினார்.

_______________________________________________________________________

நிக்கோலஸ் பூரன் சாதனை 

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனையும் சேர்த்து ஐ.பி.எல். தொடரில் இதுவரை 4 முறை 20க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 4 முறை 20க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

_______________________________________________________________________

பாக்.  - நியூசிலாந்து மோதல்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கனக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. 

இதன் முதலாவது ஆட்டம் இன்றைய இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணியளவில் நேப்பியரில் நடைபெற உள்ளது. டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும். மறுபுறம் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வெல்ல நியூசிலாந்து முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து