முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல்: 8 பா.ஜ.க.வினர் கட்சியில் இருந்து நீக்கம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      அரசியல்
BJP 2023-11-05

சண்டிகர்,  அரியானா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவினர் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன.

இதனிடையே, கடந்த பாஜக ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ரஞ்சித் சிங். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் உள்பட பாஜகவினர் 8 பேர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள ரஞ்சித் சிங் உள்பட 8 பேரையும் பாஜக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. 8 பேரும் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து