முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கனஅடியாக அதிகரிப்பு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      தமிழகம்
Mettur Dam 2023-06-02

Source: provided

சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பியது. 

பின்னர் நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர் மீண்டும் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டில் 2-வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது.

இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம்   குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 718 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று  3 ஆயிரத்து 284 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. 

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன திட்டத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 58.92 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து