முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலப்பட நெய் விவகாரம்: திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      இந்தியா
Tirupati 2024-03-30

Source: provided

திருப்பதி : கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக  ஆய்வு மேற்கொண்டனர். 

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக ஆந்திர  அரசு  சிறப்பு விசாரணை குழு அமைத்தது. 

இந்த விசாரணை குழுவானது கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.  முதல் நாள் அந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட கிழக்கு காவல் நிலையத்தில் முதல் கட்ட தகவல் மற்றும் புகார் அளித்த கொள்முதல் பிரிவு பொதுமேலாளர் முரளி கிருஷ்ணா அளித்த புகாரில் என்னென்ன குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை போலீசாரிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்டனர். 

நேற்று முன்தினம் செயல் அதிகாரி சியாமளா ராஜிடம் டெண்டர் எவ்வாறு வழங்கப்பட்டது என்ற விவரங்களை கேட்டறிந்து கொண்டனர். மேலும் கலப்படம் விவகாரம் எவ்வாறு உங்களுக்கு தெரியவந்தது.  

வழக்கமாக மைசூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பக்கூடிய நிலையில் இந்த முறை முதல் முறையாக எதற்காக குஜராத்துக்கு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். 

அதை தொடர்ந்து நேற்று மூன்றாவது நாளாக திருப்பதியில் உள்ள கொள்முதல் பிரிவு அலுவலக கிளையில் திருமலையில் உள்ள நெய் கிடங்கு உள்ள பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து