முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      சினிமா
Siddique 2024-03-30

புது டெல்லி, பிரபல மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும், கைது செய்ய தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

பிரபல மலையாளர் நடிகர் சித்திக் கடந்த 2016-ல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், நடிகர் சித்திக்கிற்கு எதிராக பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். 

சித்திக் மீதான வழக்கில் அதிகபட்ச ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளதாக தெரிகிறது. ஓட்டலில் நடந்த சாட்சிய சேகரிப்பில், சித்திக் மற்றும் புகார்தாரரும் ஒரே காலகட்டத்தில் ஓட்டலில் தங்கியிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, சித்திக் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும், கைது தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக கேரளா அரசு பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து