முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்கிறார்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      உலகம்
Keir-Starmer 2024-07-03

லண்டன்,  பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. 

கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி  பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது.  

பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  இதில் துவக்கம் முதலே  கீர்  ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. 

 பெரும்பான்மைக்கு தேவையான  326 இடங்களுக்கும் மேல் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. கீர் ஸ்டார்மர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.  இந்த நிலையில் ரிஷி சுனக், ஆட்சியை இழப்பது உறுதியானதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  

14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சியை பிடிக்கிறது.  பிரக்சிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியே வந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது.   

பிரதமர் பதவி ஏற்க உள்ள கெயிர் ஸ்டார்மர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், தற்போது முதல் மாற்றம் துவங்குகிறது. நாடு முழுவதும் இந்த செய்தி மக்களுக்கு சென்றடையும். சிறந்த நாட்டின் தோள் மீதிருந்த சுமை இறக்கப்பட்டு உள்ளது. பிரிட்டன் மீண்டும் முன்னேறி செல்லும் என்று கூறினார். 

 தோல்வியை ஏற்றுக் கொண்டு, ஆதரவாளர்கள் மத்தியில் ரிஷி சுனக் பேசுகையில், 

பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று உள்ளது. கெயிர் ஸ்டார்மரை அழைத்து பாராட்டு தெரிவித்தேன். அதிகாரம் அமைதியான முறையில் ஒப்படைக்கப்படும். தோல்விக்கு மன்னிப்பு கோருவதுடன், நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என்று பேசினார்.  

 இந்த தேர்தலில் தென்மேற்கு நார்போல்க் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் களமிறங்கிய முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் 630 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

மேலும் ரிஷி சுனக் அமைச்சரவையில் இடம்பெற்ற கிராண்ட் ஷாப்ஸ், சைமன் ஹார்ட், கிலியன் கீகன், அலெக்ஸ் சால்க், பென்னி மோர்டவுன்ட், லூசி பிராசர், ஜானி மெர்செர், மிச்செல் போன்லியன், டேவிட் டேவியஸ், மார்க் ஹார்பர் ஆகிய அமைச்சர்களும் தோல்வியை தழுவினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து