முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரானார் தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      உலகம்
Uma-Kumaran 2024-07-03

லண்டன், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில்  தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமாகுமரன் வெற்றி பெற்றுள்ளார்.  

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.   மொத்தம் உள்ள 650 இடங்களில்  தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில்,  தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில்  19,145 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4-வது இடத்தைப் பெற்றார்.  

கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்தவர். உமா குமரனின் பெற்றோர் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 1980-களில் உள்நாட்டு போரின் போது பிரிட்டன் நாட்டில் அவர்கள் குடியேறி உள்ளனர். அங்குள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தற்போது ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார்.

 அவரது குடும்பம் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வருகிறது. தங்களது குடும்பத்தினர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அண்மையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது பாட்டி உயிரிழந்ததாகவும். தேர்தல் காரணமாக இறுதிச் சடங்கில் விர்ச்சுவல் முறையில் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.  

சமூக செயற்பாட்டாளரான அவர் பல்வேறு சமூக அமைப்புளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். புரட்சி என்பது என் ரத்தத்தில் கலந்தது என்றும், அவரது தாத்தா யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்க உறுப்பினர்களில் ஒருவராக செயல்பட்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து