முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 11-ல் முதுநிலை நீட் தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      இந்தியா
Neet 2023-04-20

 புது டெல்லி, முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 

இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்.டி., எம்.எஸ். மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுநிலைத் தேர்வு நடத்தப்படுகிறது.

முன்னதாக, கடந்த  23-ம் தேதி நீட் முதுநிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக  கடந்த 22-ம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது, கருணை மதிப்பெண்கள் வழங்கியது என பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதன்படி முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி 2 ஷிப்டுகளில் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து