முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1281 கனஅடியாக அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      தமிழகம்
Mettur 2023-10-05

Source: provided

சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1281 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். 

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்துழ 686 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 100.30 அடியை எட்டி இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 546 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் மைசூரு மாவட்டம் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். நேற்று அணையின் நீர்மட்டம் 81.12 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 321 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

2 அணைகளுக்கும் 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இனிவரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மழை பெய்தால் நீர்வரத்து மேலும் அதிகரித்து 2 அணைகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. 

இந்த 2 அணைகளும் நிரம்பினால் தான் உபரி நீர் தமிழகத்துக்கு அதிகளவில் திறக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே அடுத்த வாரம் இறுதியில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று வினாடிக்கு 1281கன அடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 39.70 அடியாக இருந்தது. 

அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் நீர் இருப்பை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து