முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : ரேசன் பொருள் தட்டுப்பாடு குறித்து சுட்டிக்காட்டியும், தி.மு.க. அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 

தமிழகம் முழுவதும் மூன்று மாதமாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேசன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சென்ற மாதமே இதுகுறித்து நான் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், இதுவரை ரேசன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்யத் தவறிய  தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ரேசன் பொருட்களை முறையாக கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேசன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  தி.மு.க. அரசு,  மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான ரேசன் பொருட்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி, அனைத்து ரேசன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய  முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து