முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் அசாம் முதல்வர்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      இந்தியா
Assam 2024-07-03

Source: provided

கவுகாத்தி :  அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா நேரில் ஆய்வு செய்தார். 

அசாமில் பெய்த கனமழையால் மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக 29 மாவட்டங்களில் உள்ள 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல் பாதிப்புகளில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 698 முகாம்களில் மொத்தம் 39,338 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் திர்ருகார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர்  ஹிமாந்தா பிஸ்வா சர்மா நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். 

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு மீண்டும் மின்சாரத்தை வழங்குமாறு முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இருப்பினும் விபத்துகளை தவிர்ப்பதற்காகவே மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரானதும் உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து