முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பயணி கைது

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      தமிழகம்
Trichy-Airport

Source: provided

திருச்சி : சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக பயணி ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் டிஆர்562 விமானம் வெள்ளிக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில்,பயணியொருவா் தனது தொடைகளில் அணிந்திருந்த முழங்கால் உறைக்குள் பேஸ்ட் வடிவிலான 1,605 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதன் சந்தை மதிப்பு ரூ. 1.16 கோடி என சுங்கத்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த ஆண் பயணியை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்து அலுவலா்கள் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து