முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கறிஞர் டு பிரிட்டன் பிரதமர்: கீர் ஸ்டார்மர் கடந்து வந்த பாதை

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      உலகம்
Keir-Starmer 2024-07-03

Source: provided

லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கிறார். பிரிட்டன் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்கு பிறகு லேபர் கட்சி ஆட்சியை பிடித்திருக்கிறது. பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. அதே வேளையில், லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ள கீர் ஸ்டார்மரின் பின்னணியை காணலாம்.

கீர் ஸ்டார்மர் 1962-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய் செவிலியராக வேலை செய்து வந்தார். பள்ளி படிப்பை முடித்த ஸ்டார்மர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவருடன் பிறந்தவர்கள் 3 நபர்கள் ஆவார்கள். இவர் சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகிறார்.

கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, மனித உரிமைகளை பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார். டோனி பிளேயர் பிரதமராக இருந்தபோது பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த நிலையில், அதை மிகக்கடுமையாக எதிர்த்தவர்தான் இந்த ஸ்டார்மர் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் 2003 முதல் 2008 வரை 5 ஆண்டுகள் வடக்கு அயர்லாந்து காவல் வாரியத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார் எனவும் கூறப்படுகிறது. அதோடு, மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையை பாராட்டும் வகையில் கடந்த 2014-ல் மறைந்த ராணி எலிசபெத் இவருக்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார். இவர் திறமையான இசைக்கலைஞராகவும் அறியப்படுகிறார்.

2015-ல்தான் இவர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பி.யாக தேர்வானார். இவரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. இதையடுத்து ஸ்டார்மர் 2020-ல் லேபர் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து