முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      தமிழகம்
Mathu 2023 06 27

Source: provided

சென்னை :  டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில், மே மாதம் மேலும் 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் சென்னை  ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக  ஐகோர்ட்   உத்தரவிட்டது. இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் தற்போது செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது. 

இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கு, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி மாதம் முதல், திருவாரூர், தருமபுரி, கன்னியகுமாரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மே மாதம் முதல், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து