முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து: தொகுதி வாரியாக ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : பாராளுமன்ற தேர்தல் முடிவுள் குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது., "பாராளுமன்ற மக்களவைக்கான பொதுத்தேர்தல் கடந்த 19.4.2024 அன்றும்; வாக்கு எண்ணிக்கை 4.6.2024 அன்றும் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பாராளுமன்ற தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பதற்காக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 10.7.2024 முதல் 19.7.2024 வரை, பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பாராளுமன்ற தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டங்களில், சம்பந்தப்பட்ட பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர், கழக செய்தித்தொடர்பாளர்கள், மாவட்டக்கழக முன்னாள் செயலாளர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள், பகுதிக்கழக செயலாளர்கள், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள், நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள் உட்பட மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தொகுதிகளை சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள், அந்தந்த பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள் மட்டும் தவறாமல் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து